ஹூவாய் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் ரெட் நிறத்தில் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஹானர் 7எக்ஸ் ரெட் விரைவில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்பின்பு இந்த புதிய மாறுபாடு கொண்ட ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருவி 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080×2160 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 18:9என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் கூடதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.
டூயல்-சிம், கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன் மாடல்
No comments:
Post a Comment