இந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர், இரட்டை முன்புற மற்றும் இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் பிராண்ட் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வரவிருக்கும் கைபேசி பற்றிய அதிக விவரங்கள் இல்லை என்றாலும் கூட, அதன் "அடுத்த ஸ்மார்ட்போன் செல்பீ பிரியர்களுக்கான டூயல் செல்பீ கேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" என்பதை உறுதி செய்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்.? அதன் அம்சங்கள் என்ன.? அதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹானர் 9 லைட்
இந்த நிறுவனம் ஏற்கனவே நான்கு கேமராக்கள் கொண்ட ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.17,999/-க்கு விற்பனை செய்து வருகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு கேமிராக்கள் என்று வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளதால் கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது ஹானர் 9லைட் ஆக இருக்கவும், அது ஜனவரி மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இருந்து தொடங்கும்
சீனாவில், இந்த ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் 2017-ல் வெளியிடப்பட்டது, பின்னர் அதே மாதத்தில் விற்பனைக்கு வந்தது. அறிமுகத்தின் போது இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உட்பட 14 நாடுகளில் இக்கருவி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. சீனாவில் மட்டுமே விற்பனையாகிறது என்பதால் அதன் உலகளாவிய விற்பனையானது இந்தியாவில் இருந்து தொடங்க அதிக வாய்ப்புள்ளது.
ஹானர் 9லைட் அம்சங்கள்
இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ (EMUI) 8.0 கொண்டு இயங்குகிறது. இக்கருவி ஒரு 5.65 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 18: 9 விகிதம் மற்றும் 428பிபிஐ என்கிற பிக்சல் அடர்த்தி கொண்டிருக்கும்.
ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி
மேலும் ஹானர் 9லைட் ஆனது, 3 ஜிபி அல்லது 4ஜிபி ரேம் உடனான ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இக்கருவி அதன் முன் மற்றும் பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது.
கேமரா
முன்னும் பின்னும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. இதன் பின்புற கேமராவானது கூடுதலாக எல்இடி ஃப்ளாஷ், பிடிஏஎப் (PDAF) ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்களை உடன் கொண்டுள்ளது.
32 ஜிபி அல்லது 64 ஜிபி
சேமிப்பு மாதிரிகளை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஆனது 32 ஜிபி அல்லது 64 ஜிபி என்கிற அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாம். இரண்டு மாதிரிகளுமே கலப்பு இரட்டை சிம் உள்ளமைவில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டு அதன் வழியாக 256 ஜிபி வரை மெமரி நீடிக்கும் ஆதரவு வழங்கும்.
இணைப்பு ஆதரவுகள்
4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மற்றும் மைக்ரோ- யூஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ள இக்கருவி அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்நாட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
பேட்டரி
ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இக்கருவி 3ஜி-யில் 20 மணி நேரம் வரை பேச்சு நேரத்தையும் மற்றும் 24 மணி நேரம் வரை காத்திருக்கும் நேரத்தையும் வழங்குவதற்காக நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மேலும் இதன் பேட்டரி 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்
அளவீட்டில் 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையை கொண்டுள்ள ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.11,720/-க்கும், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.14,750/-க்கும் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.17,600/-க்கும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.
No comments:
Post a Comment