10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது 9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்
10ஆம் வகுப்பு தேர்வில் 9 பேர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் : அனுஷா(கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை), தீப்தி(பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), காயத்ரி(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), மர்சியா ஷெரீன்(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), பொன் சிவசங்கரி(இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு), சாருமதி(சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்), சோனியா(எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி), ஸ்ரீதுர்கா(வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்), வினுஷா(ஆக்சிலியம் பள்ளி, வேலூர்). முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
52 பேர் மாநில அளவில் 2வது இடம்
52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளனர்.
2வது இடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் :
*சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு
*சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்
*சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்
*ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை
*சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி
*சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட்டை மேடு, நாமக்கல்
*தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி
*விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்
*விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை
*விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு
*வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
*யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.
*பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்
*பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
*சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்
*ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்
*ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்
*அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தேவி பிரியா டி.டி.ஏ., பள்ளி, சூளைமேடு, சென்னை
*தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
*தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
*தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்
*துவாரகா சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை
*துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி
*துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்
*ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி
*பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்
*ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி
*கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
*கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்
*கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்
*கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்
*கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
*லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்
*மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு
*மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்
*முரளி கிருஷ்ணன் இ.எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு
*நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி
*பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை
*பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை.
137 பேர் மாநில அளவில் 3வது இடம்
137 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.
100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்
கணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.
மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
This year more than 11 lakhs students appeared in 10th Public Exam 2012 2013. Tamilnadu government announces sslc(10th) / Matriculation / Anglo Indian / OSLC results results will be declared on First Week of June 2013.
This time tamilnadu 10th result coming on afternoon only (First Week of June 2013 1.00 PM). Students, parents and other people view 10th exam results through tamilnadu goverment website and other private websites.
Result Links
No comments:
Post a Comment