V24s

"Get Updates : Subscribe to our e-mail newsletter to receive updates........" "Good Luck frnds" Admission 2019 Application Form 2019 Colleges Entrance Exam 2019 Results 2019 Notification 2019 University Educational Jobs 2019 Government Jobs 2019

Search This Blog v24s guys

30 May, 2013

97.29 சதவீத தேர்ச்சி விகிதம் : விருதுநகரை வீழ்த்தி குமரி முதலிடம்



நாகர்கோவில்: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விபரம்:

1. கன்னியாகுமரி 97.29%
2. தூத்துக்குடி 95.42%
3. ஈரோடு 95.36%
4. திருச்சி 95.14%
5. விருதுநகர் 95.08%
6. சென்னை 94.61%
7. புதுச்சேரி 94.45%
8. கோயம்புத்தூர் 94.12%
9. மதுரை 93.44%
10. நாமக்கல் 93.22%
11. திருப்பூர் 93.07%
12. திருநெல்வேலி 92.86%
13. சிவகங்கை 92.72%
14. கரூர் 90.72%
15. பெரம்பலூர் 90.38%
16. ராமநாதபுரம் 90.28%
17. தேனி 89.83%
18. ஊட்டி 89.81%
19. சேலம் 88.93%
20. தஞ்சாவூர் 88.77%
21. கிருஷ்ணகிரி 88.62%
22. திண்டுக்கல் 88.55%
23. காஞ்சிபுரம் 86.86%
24. திருவள்ளூர் 86.85%
25. புதுக்கோட்டை 85.74%
26. தர்மபுரி 85.51%
27. திருவாரூர் 83.14%
28. வேலூர் 83.09%
29. அரியலூர் 82.41%
30. விழுப்புரம் 81.99%
31. நாகபட்டினம் 79.53%
32. திருவண்ணாமலை 78.9%
33. கடலூர் 72.25%

பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி 2013



சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தில் 9 பேரும், இரண்டாம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1978-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்ற முறை மாற்றப்பட்டு பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதித் தேர்வாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை பொருத்தவரை மாநில பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி என்று 4 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்தன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்தனர். அவர்கள் எல்லாருமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவந்தனர்.

மேற்கண்ட கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் இடையே வேறுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் கருதினர். அதனால் சமச்சீர் கல்வி முறை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 4 கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. மேலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடர்கிறது.

கடந்த 1978 முதல் கடந்த ஆண்டு வரையும், அதற்கு முன்பும் எஸ்எஸ்எல்சி அல்லது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை அதிக மாணவர்கள் பிடித்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு முதல் 3 இடங்களை 198 பேர் பிடித்துள்ளனர். அவர்களில் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்களும், 52 பேர் 497 மதிப்பெண்களும், 137 பேர் 496 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.
இது தவிர மற்ற பாடவாரியாக பார்க்கும்போது 50 பேர் தமிழ் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 13 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

கணக்கு பாடத்தில் 29,905 பேரும், அறிவியல் பாடத்தில் 38,154 பேரும் சமூக அறிவியல் 19,680 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு முதல் 3 இடங்களையோ, பாட வாரியாக சென்டம் எடுத்ததோ இல்லை. தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனை கல்வியாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10th State First 2013 - Anusha 498 Marks - Tamil Nadu SSLC Toppers List - May 31-5-2013

Tamilnadu Directorate of Government Examination (DGE) has declared 10th SSLC Results today 31 May 2013 (Friday). Pass Percentage - 89 % (Boys - 86%; Girls - 92%) 




Toppers List:

1st Rank -  498 Marks -  9 Students - All toppers are Girls
- Anusha from Erode Kongu Vellalar School (Tamil - 99; English - 99; Maths - 100; Science - 100; Social Science - 100)
- Deepti from Madurai
- Gayathri from Tiruchi
- Narshia Sherien from Trichy
- Ponshivashankari from Erode
- Sharumathy from Tirupattur
- Sonia from Tirunelveli
- SriDurga from Cuddalore
- Vinusha from Thirupattur

2nd Rank -  497 Marks -  52 students
3rd Rank -  496 Marks -  137 students

Centum 100/100 Statistics:

- Mathematics - 29,905  Students Scored 100 out of 100
(1,141 students in 2012)

- Science - 38,154 Students Scored 100 out of 100
(9,237 students in 2012)

- Social Science - 19,680 Students Scored 100 out of 100
(5,307 students in 2012)

- Tamil - 8 Students Got 99 out of 100.
(3 students got 100 in 2012)

- English First Mark -  out of 100.

District Wise Statistics:

1) Kanyakumari - 97.29% pass - 1st rank
2) Thoothukudi - 95.42% pass - 2nd rank
3) Erode - 95.36% Pass - 3rd Rank

Chennai - 94.61% pass
Madurai - 93.4% pass
Coimbatore (Kovai) - 94.14% pass
Tiruchi (Trichy) - 95.14% pass

Tags: Class 10 Standard Tenth Std X - 1st, Second, Third Rank - State Board Top Marks - Highest Score - Pondicherry Puducherry Public Exam - Hundred out of Hundred - Mudhal Manavar Peyar - Patham Vaguppu Thervu Mudivugal - Matric SSLC Samacheer Kalvi Toppers

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது 9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்




10ஆம் வகுப்பு தேர்வில் 9 பேர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் : அனுஷா(கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை), தீப்தி(பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), காயத்ரி(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), மர்சியா ஷெரீன்(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), பொன் சிவசங்கரி(இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு), சாருமதி(சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்), சோனியா(எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி), ஸ்ரீதுர்கா(வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்), வினுஷா(ஆக்சிலியம் பள்ளி, வேலூர்).  முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

52 பேர் மாநில அளவில் 2வது இடம்

52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளனர்.

2வது இடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் :

*சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு
*சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்
*சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்
*ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை
*சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி
*சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட்டை மேடு, நாமக்கல்
*தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி
*விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்
*விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை
*விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு
*வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
*யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.
*பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்
*பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
*சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்
*ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்
*ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்
*அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தேவி பிரியா டி.டி.ஏ., பள்ளி, சூளைமேடு, சென்னை
*தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
*தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
*தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்
*துவாரகா சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை
*துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி
*துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்
*ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி
*பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்
*ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி
*கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
*கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்
*கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்
*கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்
*கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
*லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்
*மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு
*மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்
*முரளி கிருஷ்ணன் இ.எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு
*நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி
*பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை
*பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை.

137 பேர் மாநில அளவில் 3வது இடம்

137 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்

கணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.

மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக 

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in

ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Popular Posts

Recent Posts

Google Analytics